தன்னுடைய புதிய கட்சி குறித்து சந்திரிகா தெரிவித்த கருத்து


தான் எவ்விதமான புதிய கட்சிகளையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து புதிய கட்சியை அமைக்க சந்திரிக்கா தயாராவதாக, கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து, கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 அத்துடன் அழிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை நாம் கட்​டியெழுப்புவோமே தவிர புதிய கட்சியை அமைக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ள அவர், தான் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
(Tamilmirror)
Share:

No comments:

Post a Comment