காஷ்மீரில் இந்திய இராணுவம் மீதான தற்கொலை தாக்குதலும், வலுவிழந்த நீண்டகால போராட்டமும்.இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதளினால் 44 இந்திய இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

1989 க்கு பின்பு காஸ்மீர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் இந்திய இராணுவத்தினர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.

வழமை போன்று 78 வாகனங்களில் சுமார் 25௦௦ இந்திய இராணுவத்தினர்கள் தொடரணியாக பயணித்துக் கொண்டிருந்தபோது, 3௦௦ கிலோ வெடி மருந்துகளை நிரப்பிக்கொண்டு எதிரே வந்த தற்கொலையாளி தனது வாகனத்தை மோதசெய்து இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்று வரைக்கும் தீர்க்க முடியாத ஒன்றாக காஸ்மீர் பிரச்சினை இருந்து வருகின்றது.

இந்த பிரச்சினையினால் 1948, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று தடவைகள் யுத்தம் நடைபெற்றது.

தற்போது காஸ்மீர் மாநிலத்தின் ஜம்மு காஸ்மீர் பிரதேசம் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், ஆசாத் காஸ்மீர் என்ற பிரதேசம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும், மற்றும் கிழக்கு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.

1962 ஆம் ஆண்டு சீனா - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற யுத்தத்திலேயே இந்தியாவிடமிருந்த காஸ்மீர் பகுதியின் “அக்சாய் சின்” என்ற பிரதேசத்தை சீனா கைப்பேற்றியது.

இந்திய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காஸ்மீர் பகுதியில் 7௦ வீதமானோர் முஸ்லிம்கள் ஆகும். மற்றும் இந்து, பௌத்தம், சீக்கியர், கிருஸ்தவர்கள் என ஏனைய 3௦ வீதத்தினர்கள் வாழ்கின்றார்கள்.

காஸ்மீர் மக்களின் விருப்பத்திணை அறிந்துகொள்ளும் பொருட்டு அங்கு சர்வசன வாக்களிப்பு நடாத்த வேண்டும் என்ற ஐ.நா வின் தீர்மானத்தினை இதுவரையிலும் இந்தியா அலட்சியம் செய்துகொண்டே வருகின்றது.

பாகிஸ்தானின் ஆதரவினை பெற்ற பல இயக்கங்கள் காஸ்மீர் விடுதலைக்காக போராடி வருகின்றது.

ஆனாலும் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவருகின்ற “ஜெய்ஸ் ஈ முகம்மத்:” என்ற இயக்கத்தை சேர்ந்த “எடில் அஹமத்” என்ற தற்கொலை போராளி தாக்குதல் நடாத்தி உள்ளார் என்று அவ்வியக்கம் உரிமை கோரியுள்ளது.

இந்தியாவிலிருந்து காஸ்மீருக்கு சுதந்திரம் பெறுவதற்காக பாகிஸ்தானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட பல இயக்கங்களில் இதுவும் ஓர் முன்னணி இயக்கமாகும்.

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்விஸ் முஷாரப் இந்த இயக்கத்தினை கட்டி எளுப்புவதில் விசேட கவனம் செலுத்தி இருந்தார்.

ஆனாலும் இன்று பாகிஸ்தான் உட்பட உலகின் பல நாடுகளினால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ஜெய்ஸ் ஈ முகம்மத் என்ற இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இவ்வியக்கத்தை தடை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்ப்பட்டது.

உலக வரலாற்றில் மிகவும் நீண்டகாலமாக தீர்க்க முடியாத பிரச்சினையாகவும், வலுவிழந்த போராட்டமாகவும் காஸ்மீர் போராட்டம் காணப்படுகின்றது.

35 இலட்சம் மக்கள் வாழ்கின்ற ஜம்மு பிரதேசத்தில் சுமார் 5 இலட்சம் இந்திய இராணுவத்தினர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அங்குள்ள நிலைமையினை ஊகித்துக்கொள்ள முடியும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here