காலையில் பாடசாலை செல்வதற்காக பஸ்ஸிக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். வழமையாக என்னுடன் பஸ்ஸிற்காகக் காதுக் கொண்டிருந்த நபருடன் நடந்த உரையாடல்...
அந்த இடம் கடும் வளைவு(Bend). ஒரு வாகனத்தை இன்னொரு வாகனம் முந்த முடியாது.சட்டத்தில் இடமும் இல்லை.ஏதாவது விபத்து நடந்தாலும் முந்த முயற்சித்தவரின் தவறு என்றே கருதப்படும்.

அங்கு, விலையுயர்ந்த வாகனம் ஒன்று அந்த ஆபத்தான வளைவில் வந்த வேகத்திலே இரண்டு வாகனங்களை முந்திச் செல்கையில் மறு முனையில் வந்த ஆட்டோ மயிரிழையில் தப்பியது.

என் பக்கத்தில் இருந்தவர். இவ்வாறு கடிந்து ஏசினார்: #படித்தவர்களின் (Study)போக்கு இப்படித்தான். அடுத்தவர்களையும் இடங்களை பற்றியும் சிந்திப்பதே இல்லை.விலையுயர்ந்த வாகனத்தைக் கையில் எடுத்தால் ஏதே தலைக்கணம் வந்திடுது. நிதானமற்றவர்கள் என்றார்.

ஹும்.. நீங்கள் சொல்வது உண்மை.நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்று எல்லோரும் #படிக்கிறார்கள் (Study).#படித்தல் என்பது (மனனம் செய்தல், ஞாபகம் வைத்துக் கொள்ள, வாசித்தல்...) நீங்களும், நானும் படித்துள்ளோம். அதே போல் அவர் சட்ட திட்டங்களையும், (டிரபிக்)போக்குவரத்து குறியீடுகளையும் #படித்து பாஸ் ஆகி லைசன் எடுத்துள்ளார். ஆனால் #கற்றவர் அல்ல..

#கற்றவர்கள் இல்லாமல் இருப்பதுதான். அனைத்துக்குமான பிரச்சினை. #படித்ததை வாழ்வில் தேவைப்படும் இடங்களுக்கு அதனை #பிரயோகித்தல் தான் #கற்றல்.

எங்களது தவறுகளும் உள்ளன. நானும், நீங்களும் பொதுவாக அதிகமானவர்கள் புள்ளிகளுக்காகவும் சான்றிதழ்களுக்காவும்,பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை எழுதுவதற்காகவும் #படிப்பிக்கின்றோமே தவிர #வாழ்க்கையில் நிலமைகளின் போது எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்று #கற்றுக்கொடுக்க மறந்து விடுகிறோம்.

A Raheem Akbar
2019/02/27

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.