"சீனாவைக் கைப்பற்றிய சிவாஜி" போல செய்தி பரப்பும் இந்திய மீடியாக்கள்


நம்ம தெரண டி.விக்காரனின் செய்தியறிக்கைகளில் மகிந்தவாசம் கொஞ்சம் ஓவராய் வீசினாலும்  எஸ்.எம்.எஸ் நியூஸ் அலேர்ட் இல் தப்புத் தவறுகள் வருவதே இல்லை..இப்போது வந்த நியூஸ் அலேர்ட் இது...

An Indian aircraft crashes in Jammu Kashmir & 2 pilots feared dead. Pakistan claims it shot down 2 Indian jets & a pilot taken into custody - Foreign media- adaderana.lk

ஒரு பக்கம் இறந்து போன விண்வெளி வீராங்கனை கல்பனா செளலா யார் யாருடனோ கெத்தாய் நடந்து வரும் போட்டோவைப் போட்டு இவர் தான் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பெண் வீர வேங்கை என்ற போட்டோ,  புலிகளின் விமானங்கள் கொழும்பு வந்து திரிந்துவிட்டுப் போன போட்டோ,ஐ நா.சபையில் பாகிஸ்தான் பயந்து  கதறுவதாக வரும் செய்திகள்,பாகிஸ்தான் வெப்சைட்டுக்களை எல்லாம் ஹெக் செய்து சாதனை படைத்ததாக கொண்டாட்டங்கள் என்று  உல்டாவும் உலக்கைத்தனங்களுமாய் வாட்ஸ் அப் எங்கும் பீதியையும் ஜுரத்தையும் கிளப்பி இருக்கும் இந்திய மீடியாக்கள் இந்த சம்பவத்தை எப்படி எடுத்துக் கொள்ளப் போகின்றன என்று தெரியவில்லை..

என்ன பண்றது ? எல்லாம் பரம்பரையலகுகள், நிறமூர்த்தங்கள் செய்யும் சங்கதிகள் அல்லவா ? காலாகாலமாய் இதைத்தானே செய்து வருகிறார்கள்.1962 இல் இந்தியாவும் சீனாவும் யுத்தம் புரிந்து இந்தியா படு தோல்வியடைந்த காலத்தில் சிவாஜி கணேஷன் நடித்த 'ரத்தத் திலகம் ' என்ற படம் வெளிவந்தது..க்ளைமேக்ஸில் சிவாஜி சீனாவைக் கைப்பற்றி சீனக் கொடியை சுட்டு வீழ்த்தி இந்தியக் கொடியை ஏற்றி குண்டடிபட்டுச் செத்துப் போவார்..ஆஹா..இப்போதைய பொய்களின் ஆதார புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று பாருங்கள்...

சீனா தோல்வியடைவது போலக் காட்சிகள் அமையப்பெற்று இருந்ததால் கடுப்படைந்த அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கையில் படத்தைத் திரையிடத் தடை செய்தாராம்.ஸ்ரீமா அப்போது சீனாவைக் காதலித்தார்.இந்தியாவுடன் ஜென்மப் பகை..ஆனால் இரண்டு ஆண்டுகளில் ஆட்சி மாறியது..ஐக்கிய தேசியக் கட்சி அரசு வந்ததும் ' ரத்தத் திலகம் ' திரையிடப்பட்டது...என்ன திரையிட்டு...என்ன பலன்......கற்பனை என்றாலும் ஒரு தர்மம் நியாயம் வேண்டாமாடா ?

(ஸபர் அஹ்மத்)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here