பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு நெருக்கமான நாடு எனவும், பாகிஸ்தானுடன் தமது உறவு தொடரும் எனவும் சவுதி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற முஹம்மது பின் சல்மான், ஜனாதிபதியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய 'நிஷான் , பாகிஸ்தான்' விருதினை சவுதி இளவரசருக்கு வழங்கி கெளரவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இளவரசர் சல்மான் இதனைக் கூறியுள்ளார்.

காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும் என உலக நாடுகள் குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையிலேயே சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.