ஊடகவியலாளர் பொருளாதார பிரச்சினைக்கு நிவாரணம்


ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு அவர்களை முன்னேற்றும் வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதே தனது எதிர்பார்ப்பு என புதிய ஊடகத்துறை அமைச்சரான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஊடகத்துறையை சிறந்த தொழிற் துறையாக கட்டியெழுப்புவதற்கு தாம் உச்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நேற்றைய தினம் கொழும்பு பொல்ஹேன்கொடையிலுள்ள ஊடகத்துறை அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவிததார்.


நேற்று இந்த நிகழ்வில் மும்மதத் தலைவர்களும் கலந்துகொண்டு அமைச்சருக்கு ஆசி வழங்கினர். ஊடகத்துறை அமைச்சராகத் தம்மை நியமித்ததில் தாம் மகிழ்ச்சியுறுவதாகவும் தம்மீது நம்பிக்கை வைத்து இப்பதவியை தமக்கு வழங்கியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: இந்த அமைச்சானது மிகவும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய அமைச்சாகும். அதனைக் கருத்திற்கொண்டு எனக்குக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தைப் பிரயோசனப்படுத்திக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் அமைச்சர் கூறினார். 2015ம் ஆண்டு நாம் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் நாட்டில் ஊடக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். அந்த சுதந்திரத்தை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் பொருளாதாரத ரீதியிலும் மற்றும் பல்வேறு விதத்திலும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களை முன்னேற்றும் வகையில் நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். இக்காலகட்டத்தில் அரச ஊடகங்கள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவற்றைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நான் நடவடிக்கை எடுப்பேன். ஜே. ஆர். ஜயவ்ரதன, ரனசிங்க பிரேமதாச ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் ருபவாஹினி மற்றும் சுயாதீனத்தொலைக்காட்சி ஆகியன சிறந்த மட்டத்தில் செயற்பட்டன. மீண்டும் அந்த நிலையை அந்நிறுனங்கள் ஈட்ட நடவடிக்கை எடுப்பேன். சவால்களை எதிர்கொண்டு ஊடகங்கத்துறைக்கு சிறந்த சேவையை வழங்குவதே எனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here