கொழும்பில் பல பகுதிகளில் சனி - ஞாயிறு நீர் வெட்டு( மினுவாங்கொடை நிருபர் )

   அவசர திருத்த வேலை காரணமாக,  கொழும்பின் பல பகுதிகளில் (02) சனிக்கிழமை  இரவு 9.00 மணி முதல் (03) ஞாயிறு பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென,  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
   இதற்கமைய,  கொட்டாஞ்சேனை, கிறேண்ட்பாஸ். மட்டக்குளி (கொழும்பு 13,14,15) ஆகிய பகுதிகளில், இந்நாட்களில்  நீர்வெட்டு அமுலில் இருக்குமென சபை அறிவித்துள்ளது.
   குறித்த காலப்பகுதியில்,  கொழும்பு -  கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
   குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே, நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேலும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here