அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான விஷேட மாநாடு இன்று(15.02.2019) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி M.L.A.M.ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இம் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டு , கௌரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டு இரண்டு வார காலத்துக்குள் பிரச்சினைகள் காணப்படுகின்ற பிரதேச செயலாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதேச செயலக மட்டத்தில் கலந்துரையாடி முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும்
இதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்குள் மாவட்ட செயலகம் இது தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி நியமித்துள்ள தேசிய மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்க பட வேண்டும் கலந்துரையாடப்பட்டது

மேலும் மூன்று மாத காலத்திற்குள் இவைகள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதியினால் கௌரவ ஆளுநருடைய வேண்டுகோளின் பேரில் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கின்ற உயர் மட்டபிரதி வன பரிபாலன சபையின் பிரதி ஆணையாளர் நாயகம் , பிரதி காணி ஆணையாளர் நாயகம் , பிரதி வன விலங்கு திணைக்கள ஆணையாளர் நாயகம், பிரத தொல் பொருள் ஆணையாளர் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்று விரைவில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்து இவைகள் மக்களுக்கு தேவையானதா? என இனம் கண்டு உடனடியாக அக் காணிகளை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும்
இந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெற வேண்டும் என்றும் அவை உரிய காலத்திற்குள் மாகாண காணி ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான MSS அமீர் அலி, அலிஸாஹிர் மொளலானா , பாராளுமன்ற உறுப்பினர்களான s சிறிநேசன், S . யோகஸ்வரன் ,அரசாங்க அதிபர் உதயகுமார் ,வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் பரிபாலன திணைக்களம், தொல் பொருள் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் ஆகியவற்றினுடைய தலைவர்கள் மாவாட்ட பிரதேச செயலாளர்கள் , உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






media unit governor of eastern province
ALM RIFAS
0773165003 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.