தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில் சிராஸ் இணைப்பு (Update)


தென் ஆபிரிக்கா அணியுடனான தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள
இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடர் பெப்ரவரி 13 ஆம் திகதி முதல், மார்ச் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

விளையாட்டு அமைச்சர் ஹரின் பெனாண்டோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறித்த தொடரில், சர்வதேச போட்டிகளில் விளையாடும் புது முக வீரர்கள் மூவர் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும், மொஹம்மட் சிராஸ், லசித் எம்புல்தெனிய, ஓசத பெனாண்டோ ஆகியோரே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா செல்லும் டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு, அவர் மீண்டும் சிறப்பான வெளியீட்டை வழங்குவது தொடர்பில், ஓய்வழிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here