மகளிர் கல்லூரியில் அட்டகாசம் செய்த 34 மாணவர்கள் கைது


கொழும்பு – கொள்ளுபிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து பட்டாசுகளைக் கொழுத்தி அங்கிருக்கும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த 34 மாணவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸை மற்றும் பம்பலபிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலைகளின் மாணவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால், குறித்த மகளிர் கல்லூரியிலுள்ள இரண்டு வாயிற் கதவுகளுக்கும் வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவர்கள் வாகனங்கள் சிலவற்றில் வந்தே இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாகவும் மகளிர் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே மேற்ப​டி மாணவர்கள் கைது​ செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment