பாகிஸ்தான் – இலங்கை விமான சேவை 4 ஆம் திகதி வரை ரத்து


இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையின் காரணமாக இலங்கை- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான விமான சேவை எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தங்களது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்தபோதிலும், பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 
Share:

No comments:

Post a Comment