இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

'இந்திய - அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காததால், நான் இந்த முடிவை எடுக்கிறேன்' என்று அமெரிக்க பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

வளர்ந்து வரும் நாடு என்ற அடிப்படையில், 1970 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இறக்குமதிக்கு சுங்க வரிவிதிப்பற்ற சலுகையை இந்தியா அனுபவித்து வருகிறது. 

ஆனால்இ அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதித்து வருகிறது. இந்திய சந்தைக்குள் அமெரிக்காவின் நியாயமான அணுகலை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறையில் இணக்கமான உறவு இருந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 

அமெரிக்காவின் ´ஜெனரலைஸ்ட் சிஸ்டம் ஆஃப் பிரிபரன்சஸ்´ (ஜிஎஸ்பி) என்றும் அந்த சலுகை பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குவது தொடர்பான முடிவு குறித்து அமெரிக்க பாராளுமன்றத்துக்கும், இந்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்ட பிறகு, அதற்கான உத்தரவில் ஜனாதழபதழ டிரம்ப் கையெழுத்திடுவார் எனவும், இது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 60 நாட்கள் ஆகுமென்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜிஎஸ்பி என்னும் அமெரிக்காவின் இறக்குமதி சலுகை திட்டத்தில் அதிக பயனை பெறும் நாடாக இந்தியா விளங்கி வரும் சூழ்நிலையில், டிரம்ப் எடுத்துள்ள இந்த நடவடிக்கை அவர் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து இந்தியா மீது எடுக்கப்படும் மிகப் பெரிய கொள்கை முடிவாக இருக்கும். 

(பிபிசி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.