எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு, அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன்ஓர் அங்கமாகவே மஹிந்தவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

விஜித்த ஹேரத்இ சுனில் ஹத்துனெத்தி, நளிந்த ஜயதிஸ்ஸ, லால்காந்தா ஆகியோரும் ஜே.வி.பியின் சார்பில் குறித்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கப்பட வேண்டும் என்பதே கூட்டு எதிரணியின் நிலைப்பாடாக உள்ளது என்று விமல் வீரவன்ஸ அறிவித்துள்ளார்.

எனவே, 20 , ஆதரிக்கும் நிலைப்பாடு எடுக்கப்படுமானால் தீர்க்கமான அரசியல் முடிவெடுக்கப்படும் என்றும், ஜே.வி.பினரை சந்திக்கவேண்டிய தேவை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் விமல்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.