உடுவே தம்மாலோக தேரர் குற்றமற்றவராக விடுதலை


சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பிரதிவாதியான உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சரியான முறையில் நிரூபிக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். 

அதேநேரம் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட அப்போது அமைச்சராக இருந்த வசந்த சேனாநாயக்க வழங்கிய சாட்சி ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார். 

அதன்படி பிரதிவாதியான உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிருபிக்க முடியாததன் காரணமாக உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உடுவே தம்மாலோக தேரர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
Share:

No comments:

Post a Comment