லால்காந்த பிணையில் விடுதலை


பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று இவ்வாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

லால்காந்த ஓட்டிச் சென்ற கெப் ரக வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் அதில் பயணித்த இரண்டு பெண்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு நட்ட ஈட்டு தொகையினை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here