இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்காக முதலீடு செய்வதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக வௌியாகியுள்ள செய்தியை ஓமான் மறுத்துள்ளது. 

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சின் செயலாளர் சலீம் அல் அவுப் இதனைக் கூறியுள்ளார். 

ஒமான் அரசாங்கத்தின் உதவியுடன் 3.85 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. 

இதற்கு பதில் வழங்கியுள்ள ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சு, இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளதாக வௌியாகும் செய்தியை மறுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.