நாளை முதல் பெண்களுக்கான தனி ரயில் பெட்டிகள்


சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 7 ரயில் சேவைகளில், அலுவலகப் பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்ட சேவை நாளை (08) முதல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை காலை 06.30மணிக்கு மீரிகம ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு, புறக்கோட்டை நோக்கிப் புறப்படும் 525இலக்கம் கொண்ட ரயில் சேவையில் பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

ரம்புக்கணை ரயில் நிலையத்திலிருந்து நாளை  அதிகாலை 05.57மணிக்கும், பொல்காவெல ரயில் நிலையத்திலிருந்து நாளை அதிகாலை 05.25மணிக்கும், மாகோ ரயில் நிலையத்திலிருந்து நாளை அதிகாலை 04.45மணிக்கும் கொழும்பு, புறக்கோட்டை நோக்கி ரயில் சேவைகளிலும் பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், புத்தளம் ரயில் நிலையத்திலிருந்து நாளை அதிகாலை 04.30மணிக்கு புறப்படும் ரயில் மருதானையூடாக  வங்கதெனிய ரயில் நிலையம்வரை பயணிக்கும்.

காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 05.00மணிக்கு சமுத்திராதேவி மருதானை ரயில் நிலையம்வரை பயணிக்கும். இவ் ரயில் சேவைகளிலும் பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து நாளை அதிகாலை 05.00மணிக்கு மருதானையூடாக இடம்பெறும் ரயில் சேவையிலும் பெண்களுக்கென தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Share:

No comments:

Post a Comment