மாவனல்லையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்


மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனாகம பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 04 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

38 வயதுடைய தஸ்லிம் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதுடன், அவர் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here