கே.டி. லால்காந்தவுக்கு விளக்கமறியல் - நீதிமன்றம் உத்தரவு (Updates)


மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த அநுராதபுரம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

விபத்தொன்றின் பேரில் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்தவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment