சவுதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இந்தியாவற்குச் சென்றது


சவுதி அரேபியாவில் உயிரிழந்த இந்தியப் பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த இலங்கைப் பெண்ணின் சடலம் சவுதியில் இருந்து இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

வீட்டில் உள்ளவர்கள் சடலத்தை பார்த்த போது அது அவர்களுக்கு உரியதல்ல என்பதை அறிந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து சடலம் அங்குள்ள மருத்துவ கல்லூரி ஒன்றின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சடலத்தை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

(அத தெரண)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here