இலங்கையின் பொதுப்போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்கள் மற்றும் யுவதிகளின் கதைகளை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ' அவளது பயணம் பாதுகாப்பானதா? ' என்ற கருப்பொருளில் கொழும்பு நகர மண்டப மைதானத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இக் கண்காட்சியானது ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து பொதுப்போக்குவரத்தில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.

இலங்கையின் பொதுப்போக்குவரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்கள் மற்றும் யுவதிகளின் கதைகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சி ஆரம்பித்த நாளிலிருந்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கான மக்கள் கண்காட்சியை பார்வையிட்டதோடு, அங்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வுகளிலும் பங்குபற்றியிருந்தனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.