2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. 

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. 

அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற உள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறினார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று அவர் கூறினார். 

அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சி இம்முறையும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். 

மக்கள் விடுதலை முன்னணியும் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.