நிந்தவூரைச் சேர்ந்த கவிஞர் இலக்கியன் முர்ஷித் எழுதிய “நஞ்சுண்ட நிலவு” கவிதை நூலின் வெளியீட்டு அறிமுகம், வாசிப்பு அனுபவப் பகிர்வும் எதிர்வரும் 31.03.2019 ஞாயிறு காலை 8.30 அளவில் ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் கவிஞருமான கலாபூஷணம் எஸ். அகமது அவர்களின் தலைமையில் அகர ஆயுதம் – கலை, இலக்கிய மற்றும் சமூக செயற்பாட்டுக்கான தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இன்நிகழ்வில் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி, மற்றும் தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார்.
புலமை அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித் துறைத்தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வும் கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் எழுத்தாளருமான பஷீர் சேகுதாவுத், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் எழுத்தாளருமான எம்.ரீ ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் ஆகியோருடன் விஷேட அதிதிகள் மற்றும் சிறப்பதிதிகளாக பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
‘நஞ்சுண்ட நிலவு’ நூலின் வெளியீட்டு அறிமுகத்தினை அகர ஆயுதம் கலை இலக்கிய மற்றும் சமூக செயற்பாட்டுக்கான தளத்தின் ஆலோசகர் சட்டத்தரணி எஸ்.எம்.என். மர்சூம் மௌலானா நிகழ்ந்தவுள்ளதோடு நூல் மீதான வாசிப்பு அனுபவப்பகிர்வினை மூத்த எழுத்தாளரும், விமர்சகருமான கவிஞர் உமா வரதராஜன் மற்றும் எழுத்தாளர் சாஜித் அகமட் ஆகியோர் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.