கம்பஹா மினுவான்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் உள்ள மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கொன்று வாமி நிறுவுனத்தின் அணுசரணையோடு கல் எலிய அலிகார் வித்தியாலயத்தின் கேட்போர்கூடத்தில் 05.03.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

225 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் M.L.M. மக்ஷூத் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடாத்தினார்.

இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வாமி நிறுவனத்தின் கல்விப் பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் ஹபீழ் அவர்கள் நாடளாவியாகதியில் இவ்வாறான நிகழ்ச்சிகளை வாமி நிறுவனம் நடாத்த உள்ளதாகவும் குறிப்பாக மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்புவதற்காக வாமி நிறுவனம் விஷேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.