சைக்கிளில் நாய் பாந்ததால் ஒருவர் பலி, மோட்டார் சைக்கிள் விபத்தில் இன்னொருவர் பலி

ரிதீகம, பானகமுவ பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது நாய் பாய்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த நபர் ரிதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

தெலம்புகல்ல பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இதேவேளை கம்பஹா, கவுடன்கஹ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கொட்டகொட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here