பஸ்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விசாரிக்க  தொலைபேசி இலக்கம் அறிமுகம்


( மினுவாங்கொடை நிருபர் )

   பொதுப்  போக்குவரத்து பஸ்களில் பொதுமக்கள் எதிர்நோக்கும்  பிரச்சினைகளை விசாரிக்க, புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 
   இப்புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து,  பெருமளவிலான  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, மேல் மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
   தற்போது, தினமும் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்தப் புதிய  இலக்கம் 011  28 60 860 என்பதாகும். கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் இந்தத்  தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக, மேல் மாகாணப்  பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
   பாதுகாப்பற்ற முறையில் பஸ் வண்டிகளைச்  செலுத்துதல்,  அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல்,  பயணிகளை அகௌரவமான  முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பிலான  முறைப்பாடுகளே, இதுவரையிலும் ஆகக்கூடுதலாகக் கிடைக்கப்பெற்று வருவதாகவும்  அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.