குடி போதையில் மின் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய இளைஞன், மின்சாரம் தாக்கி மரணம்


குடிபோதையில் மின் கம்பம் ஒன்றின் மீது ஏறிய இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளான். ஹட்டன், அலுத்கால்ல பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சிவன் கிரிஷ்ண குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குடிபோதையில் விமலசுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லும் 33,000 வேட்ஸ் அதி உயர் மின்சாரம் கடத்தப்படும் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (17) மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(AD)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here