தோற்கவிருந்த பட்ஜெட்டினை வெற்றி பெற ரணில் செய்த மந்திரம்


ரணில் ஒரு தந்திர நரி.

பட்ஜட் வாக்கெடுப்பு தோல்வியடையும் என்று பரவலாக ஹேஷ்யங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் சதி மூலம் வீழ்ந்த அரசை  மீண்டும் தூக்கி நிறுத்த உத்தரவாதம் வழங்கிய TNA கூட ஆதரவாக வாக்களிக்குமா என்ற ஒரு ஐயம் நிரம்பிய சூழல் இன்றைய வாக்கெடுப்பு வரை இருந்தது.

TNA ஆதரவளித்தால் இன்று கிடைத்த 119 கிடைக்கும் இல்லாது போனால் 104 வாக்குகளே நிச்சயம் என்றவொரு நிலையிருந்து.TNA பட்ஜட்டிற்கு ஆதரவளிக்காது போனால் அது வாக்களிப்பில் கலந்து கொள்ளாத ஒரு நிலைப்பாட்டையே எடுத்திருக்கும்.

ஆகவே அந்த 104 வாக்குகளை வைத்துக்கொண்டு பட்ஜட்டை வெல்வது எப்படியென்ற வியூகத்தை ரணில் முன்கூட்டியே வகுத்தார்.

அது என்ன வியூகம் என்றால் ஜனாதிபதிக்கு ஆதரவான 29 SLFP எம்பிக்களை பட்ஜட்டிற்கு எதிராக வாக்களித்துவிடாது பார்த்துக்கொள்ளுதல்.

அவர்கள் இன்று பட்ஜட்டிற்கு எதிராக வாக்களித்து இருந்தால் எதிராக விழுந்த மொத்த வாக்குகள் ( 76+ 29) =105 ஆகியிருக்கும்.

இது அரசுக்கு தோல்வியை வழங்கப்போதுமானது என்பதை முற்கூட்டியே யூகித்த ரணில் தனது பின்வரிசை எம்பிமார்களை வைத்து ஒரு அச்சுறுத்தலை வடிவமைத்தார்.

அந்த துரும்பு என்னவென்றால் ‘ஜனாதிபதிக்கான பட்ஜட் நிதியொதிக்கீட்டை தோற்கடிப்பது’என்று பரப்பப்பட்ட கதை.

இதனை கேள்வியுற்ற சிரிசேன பயந்தார்.

தனது விசுவாசிகளை வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகும்படி பணித்தார்.

ரணிலின் தந்திரம் பலித்தது.

அரசின் பட்ஜட் வென்றது.

(Mujeeb Ibrahim)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here