கொஸ்கொட சுஜீ உட்பட ஐவருக்கு பிடியாணை


கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட  294 கிலோகிராம் ஹெரோய்னை, இலங்கைக்கு அனுப்பியதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்களான கொஸ்கொட சுஜீ, மொறில் என்பவர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்வதற்கு, சர்வதேச பகிரங்க பிடியாணை பிறப்பித்து கொழும்பு பதில் நீதவான் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

'கொஸ்கொட சுஜீ' என்றழைக்கப்படும் சுஜீவ என்ற நபருக்கும் அன்டனி மைக்கல் மொறில்,  எம்.எஸ். பாயிஸ், டபிள்யூ.ஏ. ரஹீம் ஆகியோருடன் சுஹோன் செரிக் ஏ. ஹூசைன் என்ற பங்களாதேஷ் பிரஜைகளுக்கே, இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிடியாணையின் பிரதிகளை குடிவரவு- குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத்தின் உரிய அதிகாரிகளுக்கும் கிடைக்கும்படி செய்யுமாறும், பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள சந்தேக நபர்களான எம்.டபிள்யூ.எம். அமீர் மற்றும் எம்.ஏ. ருஷ்தி ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here