அநுராதபுரத்தில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு


இம்முறை சர்வதேச மகளிர் தினம், அநுராதபுரத்தில் கொண்டாடப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி அநுராதபுரம் சல்காது மைதானத்தில் காலை 9.00மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

'ஆற்றலுள்ள பெண்கள் மற்றும் அழகிய உலகம்' எனும் தொனிப்பொருளின் கீழ் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய ரீதியிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here