புத்தளத்தில் போராட்டம் செய்த மக்கள் மீது பொலிஸ் தாக்குதல்!

அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவினர் இன்று புத்தளத்திற்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று காலை முதல் பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அங்கிருந்து கலைப்பதற்காக பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment