நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் சந்திப்பு


இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருட காலப்பகுதிக்கு 60 மில்லியன் குரோன்களை நோர்வே அரசு வழங்குகின்றது.

கடந்த காலங்களில் இலங்கை கண்ணி வெடிகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது கண்ணி வெடி அற்ற நாடாக திகழும் நிலையை நோக்கி பயணித்த வண்ணமுள்ளது. இந்த ஆண்டு, கண்ணி வெடி தடுப்பு ஆண்டாக நோர்வே பிரகடனம் செய்துள்ளதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை எய்த இலங்கைக்கு உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளதென வெளிவிவகார அமைச்சர் ஜன் மேரி எரிக்சென் சொரிட் தெரிவித்தார்.

கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, நோர்வேயின் பங்களிப்பு தொடர்பில் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் இதனை தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச நிநுவனங்களின் பங்களிப்புடன், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. 
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here