கபினட் அமைச்சரால் முடியாமல் போனதை, அதிரடியாக செய்து முடித்த ஆளுனர் அஸாத் சாலி (ஊடகவியலாளரின் SMS தூண்டுதல்)


ஆளுனா் அசாத் சாலி எடுத்த அதிரடி நடவடிக்கையினால் வருடக்கணக்கில் நிர்மாணிக்கப்படாத வியங்கல்ல உள்ளுர் பாலம் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சம்பவத்தினை ஸ்ரீலங்க முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தெரிவித்தார்.

 கடந்த வாரம் களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியங்கல்ல என்ற ஊரில் ஒரு ஜனாசா (மையத்து) வீட்டுக்கு தனது குடும்பத்துடன் வாகனம் ஒன்றில் அமீன் சென்றுள்ளாா். அங்கு உள்ளுர் பாலம் ஒன்று பன்நெடுங்காலமாக உடைந்து உள்ளதாகவும், சகலரும் தமது வாகனங்களை தரித்து விட்டு பாலத்தின் அண்டிய பாதையில் இறங்கி நடந்து சென்றதாகவும்  தெரிவித்தாா்.

அங்கு குழுமியிருந்த மக்கள் இந்த பாலத்தினை இதுவரை  நிர்மாணிக்க  அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்க வில்லை இவ்வாறே வருடக்கணக்கில் இப் பாலம் உடைந்து கிடப்பதாகவும் தெரிவித்துள்ளனா். இதனை நேரடியாக அவதானித்த என்.எம். .அமீன் அவர்கள் தனது கையடக்க தொலைபேசி மூலம்,  இந்த பாலம் உடைந்து கிடப்பது சம்பந்தமாகவும் அப்பிரதேச மக்கள் பெரும் குறைபடுவதாகவும் அவா் குறுந் தகவலை மேல் மாகாண ஆளுனருக்கு  உடன் அவ்விடத்திலேயே வைத்து அனுப்பி வைத்துள்ளாா்.

அந்த தகவலை உடனே ஆளுனா் பாா்வையிட்டு அடுத்த நிமிடமே  மேல் மாகாணத்தின் வீதி சம்பந்தப்பட்ட பிரதான பொறியியலாருக்கு அனுப்பி உடன் இப் பாலம் சம்பந்தப்பட்ட தடங்கள் பற்றியும்,  தனக்கும் என்.எம் அமீனுக்கும் அறிவிக்கும் படி வேண்டியிருந்தாா்.  பிரதம பொறியியலாளா் இந்தப் பாலம் சம்பந்தமாக நாங்கள் டென்டா் கோரியிருந்தோம் ஆனால் உள்ளுர் பிரதேச சபை அரசியல்வாதி இதனை தடுக்கின்றாா். ஆளுனா் அனுமதிப்படி நாளையே நாங்கள் இந்தப் பாலத்தினை நிர்மாணிக்கின்றோம் என பதில் அளித்துள்ளாா். தற்பொழுது 3 நாட்களுக்குள் அங்கு  பொறியியலாளா் இரும்பு கேடா்  கொண்டுவந்து அப் பாலத்தினை மீள நிர்மாணித்துள்ளது.  அமைச்சா் கபீா் ஹாசீமின் தாயாா் பிறந்த வியங்கல்ல ஊர். அவா் வீதி அபிவிருத்தி அமைச்சரும் கூட. அவரிடம் அப்பிரதேச மக்கள் பலமுறை இப் பாலம் பற்றி அறிவித்திருந்தும் அவாினால் அதனை நிவா்த்தி செய்ய முடியவில்லை.

 ஆனால்  அதிரடி நடவடிக்கையினால் மேல் மாகாண ஆளுனா் அசாத் சாலி ஒரு ஊடகவியலாளரின் குறுந்தகவல் போய்ச் சேர்ந்ததும் 3 நாட்களுக்குள் பாலம் அமைக்கப்பட்டுள்ளதையிட்டு அப்பிரதேச மக்களும்  நன்றி தெரிவிப்பதாக  சொல்கின்றனா்.

(அஷ்ரப் ஏ சமத்)
Share:

No comments:

Post a Comment