அத்தனகல்ல பிரதேச சபையின் UNP உறுப்பினர் அஷ்ரப் இனால் கஹட்டோவிட்டவில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன

கஹட்டோவிட்ட புகாரித்தக்கியாவின் புதிய பாதை மற்றும் கஹட்டோவிட்ட பொது மைதானத்துக்கு செல்லும் பாதைக்கு அத்தனகல்ல  பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் அவர்களால் புதிய மின்குமிழ்கள் பொறு த்தல்.

கஹட்டோவிட்ட புகாரித்தக்கியாவினால் அண்மையில் புனரமைப்பு செய்த புகாரித்தக்கியா பாதையும் ,கஹட்டோவிட்ட பொது மைதானத்துக்கு செல்லக்கூடிய பாதையோரங்களுக்கு புதிதாக மின்விளக்குகள் பொறுத்தும் பணி இன்று நடைபெற்றது.அத்தனகல்ல பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த திஹாரி வட்டார  உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் அவர்களின் முயற்சியினால் புதிதாக மின்விளக்குகள் பொறுத்தும் வேலை நடைபெற்றது.

எனவே உள்ளூர் வட்டாரத்திலும் அதே கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் இருக்கையில் ஊரில் இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளில் பாராமுகமாக இருந்து விட்டு சாக்குப்போக்குகள் சொல்லி சமாளித்து திரியும் சந்தர்ப்பத்தில் திஹாரி வட்டாரத்தில் இருந்து எமது ஊரின் முக்கிய தேவைகளில் ஒன்றாகிய இந்தப்பாதைக்கு மின்விளக்குகள் பொறுத்தியதை இட்டு கஹட்டோவிட்ட ஊர்மக்கள் சார்பிலும் புகாரித்தக்கியா சார்பிலும் கஹட்டோவிட்ட பொது மைதானத்தை பயன்படுத்தும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுடைய இளைஞர்கள் கழகங்கள் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் அஷ்ரப் இதற்கு முன்னரும் கஹட்டோவிட்ட வானை மற்றும் வயல்வெளிப்பாதையாக அமைக்கப்பட்ட தஸ்லீம் மாவத்தை  பாதைக்கும்  மின்கம்பங்களை நட்டி  மின்குமிழ்கள் பொறுத்தப்பட்டுள்ளதையும்  நன்றியுடன் நினைவு கூற வேண்டியது கட்டாயக்கடமையாகும்.

பிரதேச சபை உறுப்பினர் அஷ்ரப் அவர்கள் முன்நின்று மின்குமிழ்கள் பொறுத்தப்படும் வேலைகளை அவதானிப்பதையும் ஊர்மக்களுடன் இணைந்து வந்திருந்த ஊழியர்கள்  அதன் வேலைகளில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.
(Luthufullah)
Share:

No comments:

Post a Comment