கொழும்புத் துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதெனத் தெரிவித்துள்ள மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க, நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80 ஆயிரம்  பேருக்கு அந்நகரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளதோடு, துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. அதனை நிர்வகிக்க  கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு அமைக்கப்படும். அதற்கான சட்ட மூலங்கள் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், 269 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டுள்ள துறைமுக நகரப் பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான தனியானதொரு தேர்தல் தொகுதியும் அமைக்கப்படும் என்றார்.
சர்வதேச வைத்திய சாலை, பாடசாலை, மஹாநாட்டு மண்டபம் என்பனவும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், ​துறைமுக நகரை நிர்வகிப்பது தொடர்பான சட்டத்திட்டங்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமெனவும் கூறினார்.
மேலும், துறைமுக நகரத்துக்குரிய வர்த்தமாணி அறிவித்தலின் பின்னர், பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
(TAMIL MIRROR)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.