மின் துண்டிப்பால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கவலைப்படும் ரவி : சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள்


தேசிய உணர்வுடன் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைக்கு தீர்வு கண்டாலும், இதற்கு நீண்டகால வெற்றிகரமானத் தீர்வைப் பெறும் வரை மக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மின் துண்டிப்பால் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்காக தனது கவலையையும் தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரவி கருணபாநாயக்க தெரிவித்துள்ளார்.
(Tamilmirror)
Share:

No comments:

Post a Comment