சவுதி அரேபியாவுக்கு உதவிய இலங்கை முஸ்லிம்கள்

சவுதி அரேபியாவுக்கு உதவிய இலங்கை முஸ்லிம்கள்

புனித மக்கா மதீனா நகரங்களில் 1945ம் ஆண்டு மோசமான வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக டொக்டர் M.C.M.கலீல் அவர்கள் தலைமையில் "மக்கா மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி" என்ற குழு ஸ்தாபிக்கப்பட்டு நிதிதிரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையின் 87 ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் இதற்கு நிதி உதவி வழங்கினாார்கள். மக்கா மதீனா பஞ்ச நிவாரணத் தொகையாக  71,832.81 ரூபா வசூலானது.

கொழும்பு ஈஸ்டன் வங்கி மூலமாக மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸுஊத் அவர்களுக்கு மொத்தமாக அனுப்பிவைக்கப்பட்ட தொகை  70,000.00 (எழுபதாயிரம்) ரூபாவாகும். இலங்கை முஸ்லிம்கள் சார்பாக சவுதி அரேபிய மன்னருக்கு அனுப்பப்பட்ட கடிதமும், செலவின விபரங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களை தேடி பதிவு செய்தவர் கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் அப்துன் நாஸர் ஹனீபா Abdul Nazar Haniffa ஹஸ்ரத் அவர்கள். இது அவர்களுக்குச் சொந்தமான ஆக்கமாகும்.(From fb of Fazhan Nawas)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here