பராத் ரொட்டி


தமிழ் முஸ்லிம்கள் என்ற ரீதியில்  விரும்பியோ விரும்பாமலோ வழக்காறுகள், பாரம்பரியங்கள் என்பனவற்றில் இருந்து வேகமாக தூரப்படுத்தப்பட்டுள்ளோம் பாரத் இரவு அல்லது ஷஃபான் மாதம் 15ம் பிறை இரவு இலங்கை முஸ்லிம்கள் பாரம்பரிய அடையாளங்களில் தவிர்க்க முடியாத அம்சம்  

இலங்கையில் நிஸ்புஷ் ஷஃபான் / பராத் இரவில் வீடுகளிலிலும் பள்ளிவாசல்களிலும் ஒன்று சேர்ந்து 1.ஆயுளை நீடிக்கவும், 

2.பலாய் முஸீபத்துக்களில் இருந்து தம்மை பாதுகாக்கவும் 

3.பிற மனிதர்களிடம் தங்கி வாழ்வதில் இருந்து தம்மை பாதுகாக்கவும் 
கோரி சூறா யாசீனை ஒதி துஆ செய்து ரொட்டி வாழைப் பழம் போன்றவற்றை வழங்கும்"' வழக்கம்  மிக நீண்டகாலமாக பாரம்பரியமாக இலங்கையில் இருந்து வருகிறது. 

ஷஃபான் இரவில் இறைவன் மனிதனின் அமல்களை விஷேசமாக அவதானிக்கின்றான் என்ற அடிப்படையில் எமது ஸலபுகளும், மூதாதையர்ளும் அன்றைய தினத்தை முக்கியமாக் கருதுகிறார்கள். 

''உணவு வழங்குதல் என்ற செயல் மிகவும் சிறந்த ஸதகா" என்ற ரிதியிலும், ஏழை செல்வந்தர்கள் அனைவருக்கும் இலகுவாக வழங்கக் கூடிய உணவு ரொட்டி என்ற ரீதியில வீடுகளில் சுடப்படும் ரொட்டி குடும்பத்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் குடும் உறவுகள் மேலும் வலுவடைதையும் கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றோம். ஸதகாவினால் எமது விதிகள் கூட மாற்றப்படலாம் என்பதை நபி மொழிகளில் வாசித்திருக்கின்றோம். அவற்றை அடிப்படையாக வைத்தே எம் முன்னோர்கள் இந்த நடைமுறையை பின்பற்றினார்கள் 

இந்த ரொட்டியையும், மறுமைநாளையும்  வைத்து மக்களுக்கு மத்தியில் கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதற்காக இந்த அழகிய  வழக்காரை  இல்லாதொழிப்பது முட்டாள் தனமாகும்.  

ஸல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்கள் அழகிய வழக்காறுகளை எதிர்க்கவில்லை.அவற்றுக்கு மதிப்பளித்தே வந்திருக்கிறார்கள். பராத் ரொட்டிம் இலங்கை முஸ்லிம்களின் வழக்காறுகளில் ஒன்று. வீடுகளில் தாய் தந்தை பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து குர்ஆனை ஒதி எவ்வளவு காலம் இருக்கும். எமது முன்னோர்கள் காட்டித்ததந்த நடைமுறைகளில் பரகத் நிறைந்த தாப்பரியங் இருப்பதை இன்று நினைத்தக் கைசேதப்படுகின்றோம். 

நீண்ட காலமாக  எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த அழகிய வழக்காறுகளை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கத் தவறிவிட்டோம். இஸ்லாம் பாரம்பரிய, கலாசார, பண்பாடுகள் அற்ற வறண்ட மார்க்கமாக அடையாளங் காட்டப்பட்டு  கறுத்துப் போன நெற்றிக்கும் , சீர் செய்யப்படாத தாடிக்குள்ளும் உள்ளே  சுவர்க்கத்ததையும் நிர்ணயித்துவிட்டார்கள்.  

அழகிய கவிதைகள் தெரியாது, அழகாகப் பாடத்தெரியாது, ஒதத் தெரியாது என்றெல்லாம் இளம் சந்ததியினரை சாடிக்கொண்டிருக்கிறோம்.  இதற்குப் பின்னால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரங்களை  குழிதோண்டி புதைத்ததன் பின்னர் அடையாளங்களுக்கு உயிரூட்ட நினைக்கின்றோம்

பராத் ரொட்டி, இனிப்புக் கஞ்சி  வாழைப்பழம் சாப்பிட்ட  #பராத்இரவு -அந்த நாள் ஞாபகம்.

(பஸ்ஹான் நவாஸ்)

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here