நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல்  2.00 மணிக்குப் பின்னர் மின்னல் மற்றும்  இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு, மழையுடன் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஆகவே இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.