மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர்


பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரும் இன்று (02) அதிகாலை 4.55 மணியளவில் UL-226 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

கொழும்பு 12, மீரானிய வீதியை சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் சித்தீக் மொஹமட் சியாம் என்பவரும் கபுகொட, கம்புறுபிட்டிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய வீரசிங்க லங்கா ரஞ்சித் பெரேரா என்பவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here