சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் பைரூஸ் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை


தினகரன் -  தௌபீக், நிலாம் மற்றும் சுஜப் காசீம்  ஆகியோா்கள்  அவசரமாக  ஒன்று சோ்ந்து காலம் சென்ற சிரேஸ்ட ஊடகவியலாளா் எப்.எம் பைருஸ் அவா்களுக்காக துஆப் பிராத்தனையும்  யாசின் குர் ஆன் ஓதி அவா் பற்றிய ஞாபாகாா்த்த உரைகளும் இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் காலம் சென்ற பைருசின் மகன் பைசால் மைத்துனா் அக்கீலும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு இன்று (20) மருதானை வை.எம்.எம்.ஏ. யில் நடைபெற்றது. காலம் சென்ற பைருஸ் பற்றி முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், தினகரன் ஆலோசகா் எம். ஏ எம் நிலாம், முன்னாள் பணிப்பாளா் அகமத் முனவா், ஊடகவியலாளர் முபாரக் மௌலவி, மேல் மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளாளா் ரசுல்டீன். முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், ரூபவாகினி தமிழ் செய்திப் பணிப்பாளா் யு.எல்.யாக்கூப், விடிவெள்ளி ஆசிரியா் பைருஸ் ஆகியோறும் உரையாற்றினாா்கள்.

 துஆ  பிராத்தனையை  செயலாளா்  சாதிக் சிகான் நிகழ்த்தினாா்.

(அஷ்ரப் ஏ சமத்)


Share:

No comments:

Post a Comment