பாணந்துறை பஹ்ரியா மத்திய கல்லூரி அதிபராக ரிசான் சேர் பதவியேற்றார்


அல் பஹ்ரியா மத்திய கல்லூரி SDS
====================================
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியுடன் அல்பஹ்ரியா மத்திய கல்லூரி SDS மற்றும் SDS உப குழுவினரின் பாரிய முயற்சியின் பலனாக இன்று 05 - 04 - 2019 வெள்ளிக்கிழமை எமது பாடசாலைக்கு ஒரு திறமை மிக்க அதிபரான M I M ரிசான் அவர்களை அதிபராக கொண்டுவர முடிந்தது.

அல் பஹ்ரியா மத்திய கல்லூரி அபிவிருத்திப் பாதையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த காலப்பகுதியில் 10 -02 2019 அன்று கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைப்  பொறுப்பேற்ற ஜனாப் M H சம்ஸுல் மகி தலைமையிலான SDS குழுவினர் அவர்களோடு இணைந்து செயற்பட SDS உபகுழுவினரையும்  தெரிவு செய்து அவர்களுடன் இணைந்து  ஒரு குறுகிய காலப்பகுதியில் ஒரு அதிபரைக் கொண்டுவர முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்

 இதற்காக எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் புதிய அதிபரின் வரவேற்பு வைபவம் வெகு விரைவில் இடம்பெறும்.

மேலும் எமது பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு பெற்றோர்கள்,ஊர் மக்கள்,தனவந்தர்கள் அனைவரினதும் உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

   இப்படிக்கு  அல் பஹ்ரியா மத்திய கல்லூரி  SDS
       


Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here