குண்டு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் - ஜனாதிபதி


இன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி விஷேட ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த சதித்திட்டம் தொடர்பில் விசாரணை செய்த அனைத்து பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த விசாரணைகளுக்கு மக்கள் உதவி வழங்குமாறும் அனைவரும் நிதானமாக செயற்படுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பொய் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(AdaDerana)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here