நிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள்


நேற்று முல்லேரியா
வைத்தியமனை
வாயிலில்
காவலாளர்கள் இஸ்லாமிய
பெண்களின் அபாயாவை
கலற்றும்படி கூறி வாக்குவாதம்
செய்திருக்கிறார்கள்.
இன்று மாலபை NFTH வைத்தியமனையில்
அபாயா அணிந்து சென்ற நமது
பெண்களின் அபாயாவை கழற்றி விட்டு
உள்ளே வரும்படி கூறியுள்ளனர்.
அதை மறுத்ததால்  வாக்குவாதம்  புரிந்து அந்த பெண்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.நேற்று
முல்லேரியா வைத்திய மனையிலும்
இன்று மாலபை வைத்தியமனையிலும்
நடந்தவை முகமூடி சென்றவர்கள்  அல்ல.

அபாயாவுக்கு தாவணி போட்டு சென்றவர்கள்.
இவர்கள் எதிர்ப்பது முகமூடி பெண்களை
அல்ல.நமது மத பெண்களை.
அவர்களுக்காக வக்காலத்து வாங்குவதை
நிறுத்தி விட்டு முதலில்
அரச தரப்பு உதவிகளோடு பெண்களின்
பாதுகாப்புக்கு தகுந்த நடவடிக்கை
எடுக்க முன் வாருங்கள்.
நோய்த் தன்மை மீறி, அதற்கு நிவாரணம்
பெறுவதற்காகவே வைத்திய மனைக்கு
செல்கிறார்கள்.
வீண் பொழுது போக்கிற்காக உல்லாசம்
கொண்டாட அங்கே செல்வதில்லை.
எதற்குமே ஒரு எல்லை வேண்டும்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் சந்தர்ப்பத்தை பயண்படுத்துகிறார்கள்.
அவர்கள் பெண்களை பரீட்சிப்பதில் தவறில்லை.

வெறும் அபாயாவைக் கூட கலற்றி விட்டுதான்
வைத்தியமனையின்
உள்ளே வர வேண்டும் என்று வாதிட்டு
அடிக்க பாய்வதையும் நியாயப் படுத்திவிட்டு
இதன் பிறகும் வெடிக்கை
பார்த்து நிற்காமல்......
உலமாக்களே........
இஸ்லாமிய மந்திரி மார்களே.....
அள்ளாஹ்வுக்காக
உடனே இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பிற்கு
தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி
தயவாய் 'தாழ்மையாய்
வேண்டுகிறேன்.

அன்புடன்
ஓர் ஈமானிய சகோதரி
ஏ.சி.ஜரீனா முஸ்தபா.
Share:

No comments:

Post a Comment