இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை பொறியலாளர்கள் இருவரினால் நிர்மாணிக்கப்பட்ட 'ராவணா-1' செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 2.18 மணிக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் - வெர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில இருந்து வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு குறித்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது. 

ராவணா-1 செய்மதியை இலங்கைப் பொறியியலாளர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா ஆகிய இருவர் இணைந்து நிர்மாணித்துள்ளனர். 

ராவணா - 1 செய்மதியானது, ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமும் 1.05 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும். 

ராவணா - 1 செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 

இவ்வாறு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், செக்கனுக்கு 7.6 கிலோமீற்றர் வேகத்தில் நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வரவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.