இன்று நள்ளிரவில் முதல் பஸ் - ரயில் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்


சம்பள பிரச்சினைகளை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள போவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தாலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். 

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளை ரயில் பயணிகளுக்கு பாரதூரமான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். 

இதேவேளை, அகில இலங்கை தனியார் பஸ் சேவையாளர் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. 

அரசாங்கத்தினால் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. குமாரரத்ன தெரிவித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment