திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை - சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து


விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் நேற்று (31) அதிகாலை 5.15 மணியளவில் குடிபோதையில் முச்சக்கரவண்டி மோதிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் காயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எவ்வாறாயினும் இன்று (01) அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து நேற்று அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்திருந்தனர். 

அதனடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here