பாராளுமன்றத்தில் விசேட அமர்வு ஒன்று இன்று (23) நடைபெறவுள்ளது. 

இன்று நடைபெறவுள்ள இந்த விசேட அமர்வு குறித்த, அரசியல் கட்சித் தலைவர்களது கூட்டம் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. 

வெடிப்புச் சம்பவங்களால் விளைந்த துரதிஷ்டவசமான நிலைமை குறித்து மக்கள் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தார்கள். இது பற்றியும் எதிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது. 

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். 

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் விசேட உரையாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அத தெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.