பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (06) நடைபெறவுள்ளது. 

மேலும், பாராளுமன்றத்தினுள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாதுகாப்பு காரணமாக கடந்த மாதம் மூடப்பட்டிருந்த பொது மக்கள் பார்வை கூடம் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அத தெரண)
Share:

No comments:

Post a Comment