மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ; 32 பேருக்கு பிணை


மினுவாங்கொடையில்  இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ;
 32 பேருக்கு பிணை

( மினுவாங்கொடை நிருபர் )

   மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 
   குறித்த சந்தேக நபர்களை நேற்று  (புதன்கிழமை) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
   இலங்கையின் பல பிரதேசங்களில் கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களிலிருந்து மீள முன்னர், கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட பள்ளிவாசல்கள் மீது இரவு வேளையில்  தாக்குதல் நடத்தப்பட்டன. 
   குருநாகல், சிலாபம், குளியாப்பிட்டிய, கம்பஹா, மினுவாங்கொடை உள்ளிட்ட பல பிரதேசங்களில் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டன.
   குறிப்பாக,  மினுவாங்கொடையில் பல்வேறுபட்ட  வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்தச்  சம்பவங்களுடன் தொடர்படையோர் எனும் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களில் 32 பேர் நேற்று  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment